அரசியலில் சேர வாக்கு கேட்பதில் நம்பிக்கை இல்லை-தமிதா

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியலில் சேர வாக்கு கேட்பதில் நம்பிக்கை இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்களுக்கு நீதி வழங்குமாறு கோருவதற்காகவே தான் அந்த மேடையில் ஏறியதாக அவர் கூறினார்.

போராட்டத்தை தொடங்கியதில் இருந்து இன்னும் அவமானங்களை அனுபவித்து வருவதாகவும், தனக்கு தூக்கம் இல்லை என்றும், நடிப்பின் மூலம் தான் உருவாக்கிய பெயரை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Related Articles

Latest Articles