கறுவா மற்றும் தேயிலை செடிகளை வெட்டும் கவ்வாத்து கத்திகளை ஈடுபிடித்த பெண்னொருவரை கைது செய்ததாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
சில நபர்கள் இந்தப் பெண்ணிடம் கசிப்பு அருந்துவதற்காக இக்கத்திகளை ஈடு வைத்துள்ளனர்.
வெலிபென்ன,பொந்துபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டவராவர்.
சந்தேக நபரான பெண் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிசார் பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது 10 கவ்வாத்து கத்திகள் வீட்டின் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பிளாஸ்டிக் பெரலில் இருந்து மில்லி லிட்டர் 22500 கசிப்பு கைப்பற்றப்பட்டது. இப்பெண்ணை மத்துகம
நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
