மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே நாய் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள் சிற்றுண்டி சாலைகள் வெதுப்பகங்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது உணவின் தரம் உணவுப் பொருட்களின் காலாவதி தினம் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களின் லேபல் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு சட்டததை மீறும் வகையில் வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்கள் சோதனையிடப்பட்டன.
இதன்போது உணவகமொன்றின் சமையலறையில் வளர்ப்பு நாயை வைத்துக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
