ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர் மோசடி : விசாரணை தீவிரம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்று அறிவித்துள்ளனர்.

ரோஹிதவின் கிரெடிட் கார்டில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ச, மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு தனியார் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles