விறகு சேகரிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா, பிதுருதலாகல மலை  காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா பீட்ரு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கொலந்துவேலு என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

விறகு வெட்டச் சென்று மாலை நேரம் வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் , பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விறகு சேகரித்துக் கொண்டிருந்த இடத்தில் சரிவான பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு இரவு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் , நுவரெலியா மரணவிசாரணை அதிகாரியான பாலசேகரன் ருத்திரசேகரனும் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு நுவரெலியா மாவட்டபொது  வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்று  (10) வெள்ளிக்கிழமை  நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட நபரின் தலை,  கழுத்து, மார்பு  பகுதியில் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

இந்த பிரேத பரிசோதனையை நுவரெலியா சட்ட வைத்தியர் ஐ. கே. எஸ்.கே.வீரசேக்கர மற்றும் நுவரெலியா மரணவிசாரணை அதிகாரி பாலசேகரன் ருத்ரசேகரன் மேற்கொண்டிருந்தனர். என்பதும் குறிப்பிடதக்கது.

நானுஓயா நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles