முன்னாள் சிப்பாய் துப்பாக்கியுடன் நோர்வூட்டில் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி பகுதியில் துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவை சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீடு நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போதே
துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான இளைஞன் காலி பூசாலை இரானுவ முகாமில்
கடமையாற்றியவர் எனவும், இராணுவத்தில் இருந்து விலகி தற்போது ஏழு மாதங்கள் கடந்துள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles