முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னரே ‘அறிந்தும் அறியாமலும்’ பகுதியில் நாம் தகவல் வெளியிட்டிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்குமாறு ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், மகேஷ் சேனாநாயக்கவை தொடர்புகொண்டு அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் அவருடன் பேச்சு நடத்தியுள்ளனராம்.
“ பாதுகாப்பு துறையில் சிற்சில மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்ற பின்னர் தகுதியானவர்கள் அந்தந்த இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சிஸ்டம் சேன்ஜ் இடம்பெற்று, சிறந்த சேவை வழங்கப்படும். இது நடந்தால் நிச்சயம் நான் பதவியேற்பேன்.” என்று அந்த அரச அதிகாரிகளிடம், மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளாராம்.
தற்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்று வழங்கப்படலாம் என கதை அடிபடுகின்றது.










