கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரையில் மாற்றம்

கொவிட்–19 நோய்ப்பரவலின் புதிய கட்டத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை மாற்றியமைத்துள்ளது.

ஆரோக்கியமான பிள்ளைகளும் இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது.

ஆனால் வயதானவர்களும் நோய்வாய்ப்படக்கூடிய இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் 6லிருந்து 12 மாதங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என்று அது கூறியது.

கொவிட்–19 நோய்ப்பரவலால் கடும் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதே தனது தலையாய முன்னுரிமையாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.

Related Articles

Latest Articles