உள்ளாட்சிசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசு திரைமறைவில் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சு நடத்தியுள்ளன.
சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்பட மொட்டு கட்சி அமைச்சர்கள் சிலர் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனவும், ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறங்குவதே அவர்களின் திட்டமாகும்.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர் என தெரியவருகின்றது.










