தாத்தாவையும், பாட்டியையும் அடித்து கொலைசெய்த பேரனுக்கு வலை!

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன், தாக்கி கொலை செய்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது 80 வயதுடைய தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துவிட்டார்.

70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்கிய சந்தேக நபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்கிய பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles