மாமியாரை கொலை செய்த மருமகன்!

பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (08) பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தடுக்கு சென்ற குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles