ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வலுவான தலைமைத்துவமொன்று தலைமைத்துவம் வழங்கும். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.” என அவர் கூறினார்.
தலைமைத்துவத்தை பஸில் ஏற்பாரா என்ற கேள்விக்கு அவர் நேரடி பதிலை வழங்க மறுத்துவிட்டார்.










