சஜித் மன்னிப்பு கோர வேண்டும் – இல்லையேல் மாற்று நடவடிக்கை! வடிவேல் சுரேஷ்

” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் தீர்க்கமான முடிவை எடுக்க நேரிடும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் வடிவேல் சுரேஷ் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வருகை தராமையானது மக்கள் மத்தியில் இன்றளவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நான் விலகி இருந்தேன்.

இவ்விடயம் தொடர்பில்
எதிர்க்கட்சித் தலைவர் என் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

வரும் நாட்கள் அரசியல் களத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தும் நாட்களாகும். எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறும் வாத விவாதங்களை அவதானித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் நான் ஆராய்வேன், எது எவ்வாறாக இருப்பினும் என் மக்களுக்கு எதிரான எந்த ஒரு சட்டத்திற்கும் நான் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை.

பட்டம் பதவி கட்சிகள் வண்ணங்கள் தேவையில்லை
என் மக்களின் தீர்மானமே என் அடுத்த கட்ட அரசியல் நகர்வின் தீர்க்கமான முடிவாக அமையும்.” என்றார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles