ஹற்றனிலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்வதாக தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் இதுவரை எந்தவித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுத்தமான குடிநீர் இன்றி சாக்கடை நீரினை குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபர்கள், சிறுவர்கள் அடிக்கடி வயிற்றுவலி, வாந்தி மற்றும் ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹற்றன் ஆரியகம மற்றும் ஆஞ்சநேயர் ஆலய பகுதியில் வசிக்கும் மக்களால் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும் கழிவு நீர் இப்பகுதியிலுள்ள குடிநீரில் கலப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரொத்தஸ் கொலனிக்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பினரிடம் சென்று பேசிய போது அதற்கு கோடிக்கணக்கில் செலவிட வேண்டி வருவதாக தெரிவித்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
