பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்

ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (25) ஆரம்பமாகின்றது.

இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படமாட்டாதென தெரியவருகின்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles