நுவரெலியா மாவட்டம்: 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – அறுவர் பலி – 92 வீடுகள் சேதம்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற அனர்த்தங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போன ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் 2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

வானிலை நிலைவரம்

தற்போது நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைந்து, வானிலை சீரடைந்து வருகின்ற போதிலும், பல இடங்களில் மேகமூட்டமான நிலையே காணப்படுகின்றது.

இடம்பெயர்ந்தோர் மற்றும் நலன்புரி முகாம்கள்

நலன்புரி முகாம்களில்: 20 முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள் வீடுகளில்: 224 குடும்பங்கள் தங்கியுள்ளன.

வீடுகளுக்குத் திரும்பியோர்: வெள்ளநீர் வடிந்து வருவதால் 347 குடும்பங்கள் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். நலன்புரி முகாம்களில் உள்ள ஏனையோரையும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீதிப் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள்

பிரதேச செயலாளர்களின் தலைமையில் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles