IMF தீர்மானம் நிறைவேற்றம் – ஆதரவாக வாக்களித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி எம்.பியான பௌசி ஆதரவாக வாக்களித்தார்.

Related Articles

Latest Articles