வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் இறை விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன் சிலைகளும் களவாடப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள் பல தரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நீதிமன்ற வழக்கினை காரணம்காட்டி தொல்பொருட்திணைக்களம் மற்றும் பொலிசார் அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த இருதினங்களிற்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதின்றம் அனுமதி வழங்கியது.

மேலும் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

இதனையடுத்து இன்றையதினம் காலை சுபநேரத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் மீண்டும் வைக்கப்பட்டது.

பல சிரமங்களுக்கு மத்தியில் புதிய விக்கிரகங்கள் மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆலயத்தின் நிர்வாகத்தினர், பூசாரியார்,சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினர் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles