இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,497 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 22  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.   இதன்படி  மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2036 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

3,403 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 81 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles