உக்ரைன் போரில் 20,000 ரஷ்ய படையினர் பலி!

உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கணித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய படையினர் உயிரிழந்துள்ளனர் அமெரிக்கா கணித்துள்ளது. அதேவேளை, போர் தொடங்கியது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 1 லட்சம் ரஷிய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles