தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

ஆஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைச்சுக்கள் உள்ளடங்கிய செயற்பாட்டு குழு ஒன்றின் ஊடாக இதன் செயற்பாடுகள் வழிநடத்தப்படும்.

செயற்திறன் செயற்பாடுகள் தொடர்பிலான சர்வதேச முறைமைகளை ஆராய்ந்து பார்ப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாவதோடு, அதற்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஆஸ்திரேலிய செயற்திறன் ஆணைக்குழுவின் உதவியை அரசு கோரியுள்ளது. அதற்கான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்திருந்தது.

இந்த ஆரம்பமானது இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளதை காண்பிக்கும் அதேநேரம், அதனால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles