மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சாமிமலை பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கெசல்கமு ஒயாவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே உள்ளது.
அதேபோல் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயரும் நிலையில் உள்ளது.மழை தொடரும் பட்சத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயரும்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
