பசறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீதிம்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீதிம்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் வழியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அவ்வீதியில் காண்கள் வெட்டப்பட்டு, கல்வெடிகள் வைத்து வேலைகள் இடம்பெற்று வருவதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்லும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறியும் அவ்வழியே பயணிக்க முடியாதுள்ளது.
இவ்வீதியில் நீர் விநியோக நடவடிக்கைக்காக குழாய்கள் பொருத்தப்பட்ட பின்னர் குறித்த காண்கள் மூடப்படாமல் வீதி சீரற்ற நிலையில் காணப்படும் என் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்க மலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமு தனராஜா
