மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சமூக மற்றும் கல்விசார் பணிகளை முன்னெடுத்து வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், கல்விப் பணிக்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
மன்ற உறுப்பினர்களைக் கொண்ட அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப் போட்டி, மலையக இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாகவும் இது அமைந்துள்ளது.
இந்தப் போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி, மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நேரடியாக பயன்படுத்தப்படுவதுடன், இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் சமூக சேவை தொடர்பான ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் என மன்றம் நம்புகிறது.
40 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் ஜி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
