‘மாடல் அழகி’ தேவையெனக் கூறி மாணவிகளின் நிர்வாணப் படங்களை திரட்டிய ஏ.எல். மாணவன் கைது

மாடல் அழகிகள்’ தேவை எனக்கூறி 12 மாணவிகளின் நிர்வாணப் படங்களை ‘வட்ஸ்அப் ‘ ஊடாக திரட்டிய 19 வயது உயர்தர வகுப்பு மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினராலேயே இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கற்றுவந்துள்ளார்.

மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளின் நிர்வாண படங்களையே இவர் பெற்றுள்ளார். குறித்த மாணவிகள் சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி பயில்கின்றனர்.

தனியார் தொலைக்காட்சியொன்றினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பிரபலமான மாடல்கள் பெயரில் இரு போலி வட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மாடல் ஆகுவதற்கு விரும்பமுள்ள இளம் பெண்களுடன் தகவல்களை பிரிமாற்றி வந்துள்ளார்.

18 முதல் 20 வயதுடைய யுவதிகள் இந்த குழுவுக்கு தகவல் அனுப்பலாம் என இதில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த கணக்கிற்கு மெசேஜ் அனுப்பும் இளம் பெண்களை முதலில் தங்கள் புகைப்படங்களை அனுப்புமாறு கோரியுள்ளார். அதன் பின்னர் மொடல் அழகி ஆக வேண்டுமென்றால் நிர்வாணப்படம் வேண்டும் எனக் கூறி அதனை பெற்றுள்ளார்.

சிஐடியினர் முன்னெடுத்த விசாரணைகளில், பிரபல மொடல் அழகிகளின் பெயர்களில் வட்ஸ்அப் கணக்குகளை நடத்தி வந்த ஒருவரை அடையாளம் கண்டுள்ளதுடன் சந்தேக நபரை மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் சிஐடியினரிடம் சிக்குவதற்கு முன்னர் கணினியில் இருந்த அந்த நிர்வாண படங்கள் அனைத்தையும் அழித்துள்ளார்.

எனினும், தொழில்நுட்பம் ஊடாக சேமிக்கப்பட்டிருந்த படங்களை அதிகாரிகள் மீள பெற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles