கொழும்பு, பொரளை பொதுமயான சுற்றுவட்டத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நிகழ்வொன்று, பொரளை பொதுமயானத்துக்கு முன்பாக இன்று நடைபெற்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல், சட்டத்தரணி K.S.ரட்ணவேல், சட்டத்தரணி சுவஸ்டிக்கா அருளிங்கம், மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னலிகொட மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் என பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மற்றுமொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை உருவானது.
அங்கு அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
“புலிகளை நினைவுக்கூர வேண்டாம்” “பயங்கரவாதத்தை தோற்கடிப்போம் சமாதானத்தைப் பாதுகாப்போம்” என்கிற பதாதைகளை ஏந்தியவர்களே நினைவேந்தலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.










