காதல் தோல்வியால் ஆட்டோவை கொளுத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபர் 5 மாதங்களுக்கு பிறகு பொகவந்தலாவயில் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவு தோட்டத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி சுமார் 5 மாதங்கள்வரை தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று மாலை, நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை போற்றி தோட்ட மக்கள் மடக்கி பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரை சந்தேக நபர் காதலித்து வந்துள்ளார் எனவும், எனினும், அவரை திருமணம் செய்துகொள்ள அப்பெண் மறுத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு தீ வைத்து விட்டு, சந்தேக நபர் தப்பியோடி, தலைமறைவாகியுள்ளார். சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் தான் காதலித்த பெண், போற்றி
தோட்ட பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு வருகை தந்ததை அறிந்து, றித்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்தை கண்டபொதுமக்கள்,  சந்தேக நபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் நோர்வூட் நிவ்வெளி பகுதியை
சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

Related Articles

Latest Articles