புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி நாளை (05.06.2023) மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் காலை 7 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது எனவும், தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர் என்று போராட்ட ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
கடந்த மே 27 ஆம் திகதி இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ் சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன. எனினும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என பெரட்டாசி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய டிப்போ செயற்படுவது குறித்தும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்நிலையிலேயே பொது போக்குவரத்து சேவையைக்கோரி மக்கள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
