கஜேந்திரகுமார் எம்.பி. நாட்டைவிட்டு வெளியேறத் தடை!

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கினார்கள். என்னால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்பதால் அதனை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். அதன் பின்னர் சிங்களத்தில் அதனை வாசித்த அவர்கள் நான் அதற்குக் கட்டுப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மருதங்கேணி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை நாட்டை விட்டு தடை விதிக்கக் கோரும் வேண்டுகோளை கிளிநொச்சி மாவட்ட நீதிவானிடம் பொலிஸார் விடுத்துள்ளனர்.

அதற்கமைய நான் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தைத் பதிவு செய்யும் வரை என்னை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles