முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது

முல்லைத்தீவில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்திலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தாத்தா நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே (09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles