பராமரிப்பு நிலையத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பியோட்டம்

மடாடுகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள்  தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரும் கலென்பிடுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த மூன்று சிறுமிகளும் குறித்த பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

Latest Articles