திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!

New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று திரும்பும்வழியிலேயே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து பொலிஸாரும், மீட்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வான் வழியாகவும், தரைவழியாகவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இன்று காலை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நான்கு வைத்தியசாலைகளில் 21 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 58 வயதுடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மாநில பிரிமியர் இன்று விபத்து நடைபெற்ற இடத்துக்கு சென்றார்.

Related Articles

Latest Articles