யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles