6 மாத காலத்துக்குள் 146,686 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு ஐந்து லட்சத்து 46 ஆயிரத்து 686 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த மாதத்தின் முதல் எட்டு தினங்களில் மாத்திரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 22 ஆயிரத்து 200 பேர் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த எட்டு தினங்களில் இந்தியாவிலிருந்து 6348 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் ரஷ்யா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மன் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் நேற்றுடனான காலப்பகுதியில் பெருமளவு சுற்றுலா பயணிகள் ரஷ்யாவில் இருந்தே வருகை தந்துள்ளதாகவும் அதற்கிணங்க ரஷ்யாவிலிருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 227 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக சீனா, கனடா, அமெரிக்கா, மாலைதீவு பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மே மாதத்தில் குறைவான அளவு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை தந்ததுடன் இம்முறை கடந்த மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு செயலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles