சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பசறையில் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Related Articles

Latest Articles