வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபா மோசடி

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ்வாறு மோசடியில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த போதே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில் வைத்து, இன்று (30), குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான அந்தப் பெண், பத்தரமுல்லையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

போலந்துக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாகக் கூறி, இந்த பணத்தை மோசடி செய்துள்ளதுடன், கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு அவற்றை சட்டவிரோதமான முறையில் அப்பெண் தம்வசம் வைத்துக்கொண்டுள்ளார்.

அப்பெண்ணினால் கொண்டு நடத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம், சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் தடைச் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணுக்கு எதிராக கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விமானப் பயணம் தடைச்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அந்தப் பெண், இந்தியாவில் இருந்து இன்று (30) அதிகாலை 3 மணியளவில் இலங்கைக்குத் திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அப்பெண், கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஜூலை 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles