பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து – அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 12 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் எனவும் அவர்கள் வினவினர்.
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமை சர்ச்சைக்குரிய விடயமாகும் எனவும், புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.










