மலையகம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி – இந்திய தூதுவர் புகழாரம்

” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் இந்த புவியியல் நெருக்கம், வரலாறு, கலாசாரம், நாகரிகம், மதங்கள், மொழிகள், இசை, சினிமா, கிரிக்கெட் விளையாட்டு, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு சான்று பகர்கின்றது.”

இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்திய தூதுவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்த மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி வருகை தந்ததை மிகவும் பாராட்டுகின்றேன். கடந்த வார இறுதியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் மிக அழகான சில பகுதிகள் வழியாக மறக்க முடியாத ரயில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான் உட்பட ஒரு குழுவினர் கலந்துகொண்டோம்.

இலங்கையின் மூடுபனியுடன் கூடிய காடுகள், மலைநாடு, அழகிய நிலப்பரப்புகளின் ஊடாக அழகிய பயணத்தை நினைவுபடுத்துவதற்காக மட்டும் நான் இதனைக் குறிப்பிடவில்லை. அங்கே எனக்கு இரண்டு விடயங்கள் நினைவுக்கு வந்தது. அவற்றில் ஒன்று, இந்தியாவில் இருந்து வருகை தந்து, இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதிகள்.

இது, வசூரி மற்றும் நீலகிரி பகுதிகளுக்கான பாதையை நினைவுபடுத்துகிறது. வசூரி போன்ற வெப்பநிலை உள்ள இப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் பயணத்தில் இருபுறமும் தேயிலை தோட்டங்கள் இருப்பதால், நீலகிரி நோக்கி பயணிப்பதை இந்திய மக்களுக்கு இது நினைவூட்டுகிறது.

அந்த ரயில் பயணத்தில் உலகப் புகழ் பெற்ற ஒன்பது வளைவுப் பாலம், புகழ்பெற்ற எல்ல ஆகிய இடங்களை அடைந்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இப்பகுதி, சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு ரம்மியமாக இருக்கிறது. இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இங்கு வருகை தந்திருப்பதை இந்தியா மற்றும் இலங்கை மக்களின் சுபீட்சத்துக்கான நெருக்கமான மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் இந்த புவியியல் நெருக்கம், வரலாறு, கலாசாரம், நாகரிகம், மதங்கள், மொழிகள், இசை, சினிமா, கிரிக்கெட் விளையாட்டு, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு சான்று பகர்கின்றது. இந்த மாநாட்டை நடாத்துவதற்கு ஆதரவு வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் அதற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்பட்ட சென்னை-யாழ்ப்பாண விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மட்டுமன்றி, இந்த விமான சேவையை ஜூலை 16 ஆம் திகதி முதல் நாள் தோறும் இயக்க எமக்கு முடிந்தது. இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச கப்பல் தொடர்பான யோசனை தொடர்ந்தும் வெறும் யோசனையாக மாத்திரம் இருக்காது என்றே கூற வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, எல்லைகளைத் தாண்டி வாழ்க்கையை மாற்றுவது மட்டுமன்றி, நமது பொதுவான பாரம்பரியத்தை கட்டியெழுப்பவும் காரணமாக அமையும்.“ என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்திய சுற்றுலா முகவர் சங்கத்தின் தலைவர் ஜோதி மாயல் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles