சுகாதார அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – விமல் வலியுறுத்து

” சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச.

” பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் நிலைமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து அவசர கொள்வனவு முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய சர்ச்சை தோற்றம் பெற்றுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறுபிள்ளை போல் கருத்துரைக்கிறார். ” – எனவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles