அமைச்சு பதவியை துறக்கிறார் ரொஷான் ரணசிங்க?

” விவசாயிகளுக்காக அமைச்சு பதவியைக்கூட துறப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

” இலங்கையென்பது விவசாய நாடு, இதனை எவரும் மறந்துவிடக்கூடாது. எனவே, விவசாயத்துக்குரிய நீரை வழங்குவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நீர் வழங்கலின்போது முதலில் குடிநீருக்கும், இரண்டாவது விவசாயத்துக்குமே வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் மின்சாரத்துக்குரிய நீர் பெறப்பட வேண்டும்.

வறட்சி, மின்வெட்டை காரணம்காட்டி விவசாயத்துக்குரிய நீரை வழங்காமல் இருக்கமுடியாது. விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் அது பெரும் பிரச்சினையாக மாறும். இது சிலருக்கு விளங்குவதில்லை.

இந்த பிரச்சினை தொடர்பில் நான் உண்மையை கதைப்பதால் பதவி விலக வேண்டியேற்படின், விவசாயிகளுக்காக அதனை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles