சாக்லேட்டுக்குள் மனித விரல்!

மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரால், வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வாங்கப்பட்ட சாக்லேட்டுக்குள் (Chocolate) மனித விரலொன்று இருந்துள்ளது.

குறித்த ஊழியர் சாக்லேட்டை வாங்கி, உண்ணும் போது மிகவும் கடினமாக முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து, அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய பெரு விரல் பகுதி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles