சஜித் கூட்டணியில் டலஸ் அணி சங்கமம்! பேச்சுகள் ஆரம்பம்!!

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையினரை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று தெரியவருகின்றது.

இரு தரப்பில் இருந்தும் இதற்காக பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

இதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சஜித் தலைமையில் எதிர்காலத்தில் அமையவுள்ள பரந்தபட்ட கூட்டணியில் டலஸ் அணி இணையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles