” இறக்கவில்லை – உயிருடன்தான் இருக்கிறார்”

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துவிட்டார் என பரவும் செய்தி போலியானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலங்கா தெரிவித்துள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழக்கவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே. என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles