இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து….!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியது. இதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது” எமது அண்டைநாடு என்ற வகையில் இந்தியாவின் இந்த சாதனைக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் வாழ்த்து தெரிவித்தார்.

Related Articles

Latest Articles