இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இருநாடுகளுக்குமிடையில் பெற்றோலிய உற்பத்திகளை பரிமாற்றம் செய்வதற்கான குழாய் உருவாக்கம் தொடர்பிலேயே, அமைச்சரின் திருகோணமலை விஜயம் அமைந்திருக்குமென தெரிவிக்கப்படுகிறது. இவரது வருகையில் மேலும் பல இராஜதந்திர விடயங்கள் கலந்துரைாயடப்படவுள்ளன.










