நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் சஜித் அணி கோரிக்கை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைக்கு அமைச்சரே காரணம் எனவும், எனவே, மக்கள்மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆளுங்கட்சியினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் சுகாதார தரப்பினர் நேற்று அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே, இந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சி விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரதத்தில் விவாதம், வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Latest Articles