மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்ட வனப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
மனித செயற்பாடுமூலமே இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனுடன் தொடர்புடைய விஷமிகளை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்து கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தீயை கட்டுக்குள்கொண்டுவந்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
