அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை ஐ.நா. பிரதிநிதியிடம் பட்டியலிட்டார் அநுர!

ஐ.நாவின் வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று (29) முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இலங்கை அலுவலகத்தின் அபிவிருத்தி ஆலோசகர் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் எட்வட்டும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதார இலக்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் மேலும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அநுர குமார திசாநாயக்க, தேர்தலை நடத்தாது அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்துள்ளமை தொடர்பிலும் ஐ.நா. பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

தேர்தலை நடாத்துவதற்கு கட்டளையை பிறப்பித்த நீதிபதிகள் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுதாகவும், மக்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குமுறைக்குட்படுத்தி அரசாங்கம் ஜனநாயக விரோத போக்கினை முன்னெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles