தொல்லியல் அடையாளங்கள் அழிப்பின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளாம் – மேர்வின் கண்டுபிடிப்பு!

வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. டயஸ்போராக்களின் ஆதரவுடன் புலி ஆதரவாளர்கள் இதனை செய்துவருகின்றனர். அப்பாவி தமிழ் மக்கள் இதன் பின்னணியில் இல்லை. மாறாக தமிழ்த் தலைவர்களே இதன் பின்னணியில் செயற்படுகின்றனர்.

இந்த நாட்டில் தற்போது வாழ்வதற்காக போராட வேண்டியுள்ளது. தண்ணீர்கூட இல்லை. ஆனால் அரசியல் செய்கின்றனர். ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முற்படுகின்றனர். நாமலை முன்னிலைப்படுத்துகின்றனர். இது தவறு. ராஜபக்சக்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். நானும் ராஜபக்சக்களுக்கு சோரம் போனவன். ஆனால் தாஜுடினுக்கு செய்ததுபோல் எனது மகனுக்கும் செய்ய முற்பட்டனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். எனக்கு வேட்புமனு வழங்கவில்லை.

இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபனத்துக்கு ராஜபக்சக்களே என்னை அனுப்பிவைத்தனர். தாக்குதல் நடத்த உத்தரவிட்டனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles