பதுளை, எகொடபிட்டிய, பத்தனேகெதர பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தம்பகஹாவத்தை, கல்கொடுவேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 01.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரரும் அவரது மனைவியும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் நீதவான் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
